முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் டிப்டாப் ஆசாமியாக வலம் வந்து பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கர்னூல், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 33 வயதான ராஜ்குமார் தனது பேஸ்புக்கில் தான் காதல் லீலைகளை ஆரம்பித்தார். தனது வழுக்கை தலைக்கென ஒரு விக் ரெடி பண்ணி போட்டுக் கொண்டு கோட், சூட் அணிந்து டிப் - டாப் ஆசாமியாக போட்டோக்களை எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இதனை பேஸ்புக்கில் பார்த்த பெண்களில் ஒவ்வொருவராக ராஜ்குமாரிடம் ஏமாற தொடங்கினார்கள்.

இதே போல கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார் ராஜ்குமார். இந்தமோசடியில் ஆந்திராவின் பெரிய பணக்கார வீட்டு பெண்களிலிருந்து, உயரதிகாரிகளின் வீட்டு பெண்கள் வரை அடக்கம். ஒரு துறையையும் விட்டு வைக்கவில்லை. கடைசியில் இந்த விவகாரம் கர்னூல் போலீசுக்கு போனபிறகுதான் ராஜ்குமாரின் விஷயங்கள் வெளிவந்திருக்கிறது.

பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களில் அவர்களுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கமும் ராஜ்குமாருக்கு இருந்துள்ளது. நெருங்கி பழகிய பிறகு அவர்களிடம் பணம் கறக்க ஆரம்பிப்பது ராஜ்குமாருக்கு அடுத்த பழக்கமாக இருந்துள்ளது. பணம் கிடைக்கவில்லையென்றால் இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அவர்களது வீட்டுக்கே அனுப்பி அந்த பெண்ணின் மானத்தையே வாங்கி விடுவது ராஜ்குமாரின் பழக்கமாம்.

இப்படித்தான் ஒரு பெண்ணிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த பெண்ணால் ராஜ்குமார் கேட்ட பணத்தை தர முடியவில்லை போலும். அதனால் வழக்கம்போல் எடுத்து வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட போட்டோவை இணையதளத்தில் அனுப்பி வைத்து வைரலாக்கி விட்டார் ராஜ்குமார். இந்த விஷயம் பெண்ணின் அப்பாவுக்கு தெரியவர, கடைசியில் அவர் தற்கொலையே செய்து கொண்டார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டில் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். ஆனாலும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் இதே பாணியில்தான் இறங்கினார். தற்போது ராஜ்குமாரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டது போலீஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து