முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கோவா முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பனாஜி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று சிறப்பு விமானம் மூலம் கோவாவில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றார்.

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி வீடு திரும்புவார் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று சிறப்பு விமானம் மூலம் கோவாவில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றார். அங்கு, அவருக்கு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அவரை கண்காணிப்பதற்கு மருத்துவர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து