முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, 2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டிரைவிங் லைசென்சுகள் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றன. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றன. இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் வரும் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் வழங்கும்முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த லைசென்ஸ்கள் ஏ.டி.எம். கார்டை போன்று இருக்கும். இதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் கியூ.ஆர். கோடு வழங்கப்படும். இதில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் பதியப்பட்டிருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து