முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் மாநில அளவிலான சோட்டோகான் கராத்தே போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற மாநில அளவிலான சோட்டோகான் கராத்தே பயிற்சி முகாம் மற்றும் கராத்தே போட்டிகளில் சிறப்புடன் செயல்பட்ட 60க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பிளாக்-பெல்ட் வென்று சாதனை படைத்தனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் வேர்ல்டு டிரெடிசனல் சோட்டோகான் கராத்தே பெடரேசன் சார்பில் 4வது மாநில அளவிலான கராத்தே பயிற்சி முகாம் மற்றும் கராத்தே போட்டிகள் திருமங்கலம் நகர் ஏர்போர்ட் சாலையில் உள்ள பாலகுரு கமலா மஹாலில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட இந்த முகாமில் இந்திய சோட்டோகான் அமைப்பின் தலைமை பயிற்சியாளர் ஷிகான்.சட்ரஜித் சௌத்ரி கலந்து கொண்டு சிறப்பு பயிற்சியளித்தார்.பின்னர் நடைபெற்ற கராத்தே போட்டிகளின் துவக்க விழாவிற்கு சேர்மன்.எல்.பாஸ்கர் முன்னிலை வகித்தார்.செயலாளர் டி.கண்ணன் வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக பொறியாளர் சி.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டார். போட்டிகளை தேசிய தலைமை பயிற்சியாளர் ஷிகான்.சட்ரஜித் சௌத்ரி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற செயல்முறை விளக்கம் மற்றும் கராத்தே போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் சிறப்புடன் செயல்பட்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி போட்டியிட்டனர்.பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் பங்கேற்ற 60க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பிளாக்-பெல்ட் வென்று சாதனை படைத்தனர்.இதை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்தேசிய தலைமை பயிற்சியாளர் ஷிகான்.சட்ரஜித் சௌத்ரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாவிகளுக்கு பதக்கங்களையும்,சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழகத்தில் செயல்பட்டு வரும் வேர்ல்டு டிரெடிசனல் சோட்டோகான் பெடரேசன் தலைவர் ஜி.பால்பாண்டி,செயலாளர் டி.கண்ணன்,பொருளாளர் எ.பொன்னுசாமி(எ)ராஜா,தொழில்நுட்ப இயக்குநர் எம்.மணிகண்டன்,சேர்மன் எல்.பாஸ்கர்,துணை தலைவர் எல்.வி.சேதுராம்,துணை செயலாளர் எம்.திருப்பதி,ஒருங்கிணைப்பாளர் டி.விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து