முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 87 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பசுமை ராமேஸ்வரம் திட்டம் குறித்து விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சி.

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்-   அப்துல்கலாம் 87 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தீவு வளா்ச்சி குழு சார்பாக பசுமை ராமேஸ்வரம்  திட்டம் குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் நேற்று நடைபெற்றது.
  மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைப்பில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் யாத்ரிகள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தரும் பழமை வாய்ந்த புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தின் சுற்றுப்புற சுகாதாரத்தில் மேம்படுத்திடும் நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலா்கள், தன்னார்வு அமைப்புகள்  பங்களிப்பு செய்திடும் வகையில் தீவு வளா்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவு வளா்ச்சி குழு சார்பாக இந்திய குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 87 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியா்கள் பங்கேற்ற  பசுமை ராமேஸ்வரம் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சிப் பகுதிக்கு உட்பட்ட பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் நேற்று மனித சங்கிலி நிகழ்ச்சி உள்பட பல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வரவேற்புரையாற்றினார்.நிகழ்ச்சியில்   நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தொடர்ந்து அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மாணவ,மாணவிகள் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பசுமை ராமேஸ்வரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பின்னர் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.அதன்பிறகு ராமேஸ்வரம் கோசுவாமிமடத்தில் உள்ள அரங்கில் ராமேசுவரத்தின் பெருமைகளை பறைசாற்றிடும் வகையில் ’இலக்கியத்தில் ராமேஸ்வரம் என்ற தலைப்பிலும் ராமேஸ்வரம் தீர்த்தங்களின் சிறப்புகள் என்ற தலைப்பிலும் தீவு வளா்ச்சிக் குழு சார்பாக தயார் செய்யப்பட்ட இரண்டு புத்தகங்களையும், மனித சங்கிலியின் சிறப்புகள என்ற தலைப்பிலான புத்தகங்களையும் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பசுமை ராமேசுவரம் குறித்து சிறைபுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார்,ராமேசுவரம் ரோட்டரி சங்க நிர்வாகி பொறியாளர் முருகன் தங்கச்சிமடம் நுக்ரவோர் அமைப்பு தலைவர் முருகேசன் மற்றும் ராமேசுவரம் தீவு பகுதிகளிலுள்ள பள்ளி மாணவ,மாணவிகள் உள்பட தங்கச்சிமடம் ஊராட்சி மற்றும் ராமேசுவரம் நகராட்சி அலுவலர்களும்,சுகாதார பணியாளர்களும்,மகளிர் அமைப்பு பெண்களும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து