முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கருட சேவை : பக்தர்கள் குவிந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 5-வது நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா  என பக்தி முழக்கமிட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலம் முன்பு ஏராளமான கலைஞர்கள் மேளதாளத்துடன் பல்வேறு வேடங்களில் நடனமாடியபடி வந்தனர்.

நேற்று இரவு பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நடைபெற்றது. தசரா விடுமுறை, வார விடுமுறை காரணமாக தங்க கருட சேவையை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் திரண்டிருந்தனர்.

இதனால் திருப்பதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பல பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஆங்காங்கே அன்ன பிரசாதம், குடிநீர் போன்றவை ஸ்ரீவாரி சேவா பக்தர்களால் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து