முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற போது வேட்டி தடுக்கி கீழே விழுந்த தேவகவுடாவுக்கு காயம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

மைசூரூ : கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தேவகவுடா தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தில், 10 நாட்கள் கொண்டாடப்படும் தசரா பண்டிகை தொடங்கி நடந்து வருகிறது. மைசூரு நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளை கர்நாடக அரசு நாள்தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதியோர்களுக்கான 21 கி.மீ. மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஜி.டி. தேவகவுடா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அது மட்டுமல்லாமல் தானும் இந்த ஓட்டத்தில் பாரம்பரிய வேட்டி,சட்டை அணிந்து பங்கேற்றார். அமைச்சர் தேவகவுடா ஓடத் தொடங்கியதும், அவருடன் அதிகாரிகள் சிலரும், ஊடகத்தினரும் ஓடத் தொடங்கினார்கள்.

ஓடும் போது அவ்வப்போது வேட்டி கீழே நழுவாமல் சரி செய்து கொண்டே தேவகவுடா ஓடி வந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் வேட்டி தடுக்கி அமைச்சர் தேவகவுடா திடீரென கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும், உடன் ஓடி வந்தவர்கள் தேவகவுடாவைத் தூக்கி விட்டு ஆசுவாசப்படுத்தினார்கள். சாலையில் கீழே விழுந்ததால், அமைச்சருக்கு கை, காலில் லேசான சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் ஓட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து