முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ள வானிலை மையம், இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 மில்லி மீட்டரும், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து