முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் சுவரொட்டி ஒட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், உத்தரவு.

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,- மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணியில் உள்ள எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்   திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 மாட்டுத்தாவணியில் உள்ள எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் வைக்கப் பட்டிருந்த இரு சக்கர வாகனங்களுக்கு பூட்டு போட உத்தரவிட்டு தலா ரூ.1000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மாநகராட்சி அனுமதி அளவை விட கூடுதலாக நடைபாதையில் ஆக்கிரமிருத்து  வைக்கப்பட்டிருந்த கடையின் உரிமத்தை ரத்து செய்யவும், பயணிகள் காத்திருக்கும் அறை மற்றும் சுற்றுப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அப்புறப் படுத்துமாறும், சுவரொட்டிகள் ஒட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.5000 அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். பேருந்து நிலையத்தில் உள்ள மழைநீர் வடிகாலின் மூடியை திறந்து பார்த்து அடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரிசெய்யுமாறும், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளின் வரிசை எண்களை பார்வைக்கு தெரியுமாறு எழுதி வைக்குமாறும் கூறினார். அங்கு நடைபாதையில் வைக்கப்பட்டிருந்து உணவகத்தின்பொருட்களை அப்புறப்படுத்துமாறும், பயணிகளுக்கு இடையூறாக திரிந்த நாய்களை பிடிக்குமாறும் கூறினார். மேலும் அங்குள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, கட்டண கழிப்பறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு கூறினார். கட்டண கழிப்பறையில் ஆய்வு மேற்கொண்டு அங்கு வந்த பயணிகளிடம் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்கிறார்களா என கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பழ மார்க்கெட்டில் இறுதி கட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் .பழனிச்சாமி, உதவி ஆணையாளர் (வருவாய்)  .ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் சி;த்திரவேல், செய்றபொறியாளர்  .ராஜேந்திரன், சுகாதார அலுவலர்  .சிவசுப்பிர மணியன், சுகாதார ஆய்வாளர்  .இளையராஜா, உதவிப்பொறியாளர்  .குழந்தைவேலு உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து