முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்டகலெக்டர் தண்ணீரை திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

     தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தமிழக அரசின் உத்தரவின்படி, முதல்போக சாகுபடிக்காக நேற்று  மாவட்ட ஆட்சித்தலைவர்  பல்லவி பல்தேவ், தண்ணீரை திறந்து வைத்தார்.
       அவர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகவும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தண்ணீர் திறப்பால்  பழைய நன்செய் பாசன நிலங்களான 1825 ஏக்கருக்கும், புதிய புன்செய் பாசன நிலங்களான 1040 ஏக்கருக்கும், என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முதல்போக சாகுபடிக்காக இன்று முதல்  டிசம்பர் 15ம் தேதி வரை  62 நாட்களுக்கு 30 கனஅடி வீதமும், டிசம்பர் 16 முதல்  2019 ஜனவரி 15ம் தேதி  வரை 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கனஅடி வீதமும், ஜனவரி  16 முதல் 15 மார்ச் வரை உள்ள 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கனஅடி வீதமும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    மேலும், இதன்; மூலம் பெரியகுளம் வட்டம் தென்கரை, லெட்சுமிபுரம், தாமரைக்குளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறும். மேலும் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
    இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) தினேஷ்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, செயற்பொறியாளர் (மஞ்சளாறு வடிநிலக்கோட்டம்) குமார், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்ரிதா, உதவி பொறியாளர் கோகுலக்கண்ணன், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், வட்டாட்சியர் ரத்தினமாலா மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து