முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமால் விவகாரம்: நிலவரத்தை அறிய சவுதி செல்கிறார் அமெரிக்க அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சவுதி செல்ல இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசு மற்றும் அதன் இளவரசர் சல்மான் ஆகியோரை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் துருக்கியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவிருந்த நிலையில், துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார். ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறி வந்த நிலையில் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த சவுதி, எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதைவிட கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் ஜமால் விவாகாரம் தொடர்பாக சவுதி அரசரிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், சவுதி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும் ஜமால் மாயமான விவகாரத்தில் விடையை தேட சவுதி துருக்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. நான் இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சரை சவுதி மன்னர் சல்மானை சந்திக்க அனுப்ப இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து