முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா முதல்வர் பாரிக்கர் உடல் நலம் தேறி வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பனாஜி : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நலம் தேறி வருவதாகவும், ஒரு வாரம் அவர் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முதல்வர்  பாரிக்கர், கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த செப்டம்பர் 15- ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்னரும் மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் அமெரிக்கா சென்று வந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை கோவாவிற்கு அழைத்து வரப்பட்டார்.

இதுதொடர்பாக கோவா முதல்வர் அலுவலகம்   வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முதல்வர் பாரிக்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் நன்றாக உரையாடினார். ஒரு வாரத்துக்கு நன்கு ஒய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவ குழுவின் பரிந்துரையின் படி, வீட்டிலேயே முதல்வருக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. அவரது உடல்நலனை எப்போதும் கண்காணிக்கும் வகையில் மருத்துவ குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனிடையே, மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து பாஜக உயர்நிலைக் குழுவினர் பாரிக்கரை சந்தித்து  பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து