முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஆதரவு கொடுத்தால் மாணவர்கள் கல்வியில் இமாலய சாதனை புரிவார்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் முன்னாள் பொது மேலாளர் ராகவன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஆதரவு கொடுத்தால் மாணவர்கள் கல்வியில் இமாலய சாதனை புரிவார்கள் பள்ளி ஆண்டுவிழாவில் இந்தியன் ஏர்லைன்ஸ் முன்னாள் பொது மேலாளர் ராகவன் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள  ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் நாகரத்தினம் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீசாரதா   கல்வி அறக்கட்டளையின் தலைவர் சங்கர் அறக்கட்டளளை செயலளார் அய்யப்பன், உதவி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பானுமதி, ஆகியோர் வாழத்துரையாற்றினார்கள். சென்னை விமான நிலைய முன்னாள் பொது மேலாளர் ராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தனது சிறப்புரையில் 2001ம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளி தற்போது 18வது ஆண்டில் வெற்றி நடை எடுத்து வைத்துள்ளது. இப்பள்ளியானது கிராம பகுதியில் அமைந்திருந்தாலும் நகர்புற மாணவ, மாணவிகளுக்கு இணையாக கல்வி, கலை இலக்கியம், விளையாட்டு, யோகா உள்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக கற்றுக் கொடுப்பதினால் தொடர்ந்து 100 சதவீதம் சாதனை படைத்து வருகிறார்கள். காரணம் இப்பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களின் சிறப்பாக கல்வி போதனை மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களின் கொடுக்கும் முழு ஆதரவினால் இப்பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் மாணவ, மாணவியர்களை முழுமையான சாதனை படைக்க வேண்டுமென்றால் இதே போன்று கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நிர்வாகத்தினருக்கும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மாணவ, மாணவியர்கள் இமாலய சாதனை படைப்பார்கள் என்று கேட்டுக் கொண்டார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, சாதனையாளர்களின் நிகழ்ச்சி மற்றும் யோகா, ஸ்கேட்டிங் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதலிநரசிங்கபெருமாள், செயலாளர் தங்கராஜ், மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். பள்ளியின் முதல்வர் நாகரத்தினம் தலைமையில் ஆசிரியர்கள் பணியாளர்களுடன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். முடிவில் ஆசிரியர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து