முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை அழவைத்தவர் டெண்டுல்கர் - முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.  

சினிமா, அரசியல்...

இந்தியில் வெளியாகும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் உடனான நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை தனது சக போட்டியாளருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவர் டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். தற்போது, தடை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர், சினிமா, அரசியல் என தனது வாழ்க்கையை வேறு பக்கம் திருப்பினார்.

சிறப்பாக இருந்ததாக...

இந்நிலையில், தற்போது இந்தியில் வெளியாகும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் போட்டியாளராக உள்ளார். தனது சக போட்டியாளரான அனுப் ஜலோடா உடன் அவர் தனது கிரிக்கெட் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய அவர், பழைய சம்பவம் ஒன்றை குறிப்பிட்டார்.  “2011-ம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து சச்சின் டெண்டுல்கர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, தொகுப்பாளர் உலகக்கோப்பை வெற்றி மற்றும் அணி வீரர்கள் குறித்து கேட்டார். எனது பெயரை அந்த தொகுப்பாளர் குறிப்பிடவில்லை. எனினும், நிகழ்ச்சி முடியும் போது எனது பெயரை கூறிய சச்சின் டெண்டுல்கர், உலகக்கோப்பை தொடரில் எனது பங்களிப்பு சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டார். இந்த காட்சியை பார்த்ததும் நான் நீண்ட நேரம் அழுதேன்” என ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சியாக பேசினார்.

அரசியல் களத்தில்...

2013-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது சூதாட்ட புகாரில் கைதான அவர் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுட்கால தடை விதித்தது. எனினும், இந்த வழக்கில் இருந்து 2015-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து, டெல்லி போலீசார் மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த 2016 கேரள சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கிய ஸ்ரீசாந்த் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து