முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: பாகிஸ்தானில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லாகூர், பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிறுமி கொலை...

பாகிஸ்தானில்  பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த  ஜனவரி மாதம், ஜைனப் அன்சாரி  (வயது 7) என்ற சிறுமி திடீரென மாயமானாள். சிறுமி மாயமானது பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த போது, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். உடற்கூறு ஆய்வில்,  அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

கலவரம் - 3 பேர் பலி

இந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்தையும், துணை கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட சென்றனர். அவர்களின் போராட்டத்தில் கலவரம் மூண்டது. போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். துணை கமிஷனர் அலுவலகத்தை சூறையாட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது நட ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

மரண தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக  இம்ரான் அலி (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 3 மரண தண்டனை விதித்து  தீர்ப்பு அளித்தது. நேற்று அதிகாலை குற்றவாளி இம்ரான் அலிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. லாகூர் கோட் லோக்பாத் சிறைசாலையில் இந்த தண்டனை நிறைவேற்றபட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து