முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை பருவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களும் பாலியல் புகார் அளிக்கலாம்: மேனகா காந்தி தகவல்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : குழந்தை பருவத்தின் போது பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய வயது எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி கூறி உள்ளார்.
இது குறித்து மேனகா காந்தி கூறியதாவது:-

இ பாக்ஸ் மூலம் தெரிவிக்கலாம்

குழந்தை பாலியல் துஷ்பிரயோக பாதிப்புக்குள்ளானவர் தனது தற்போதைய வயது எதுவாக இருந்தாலும்  எந்த நேரத்திலும் புகாரளிக்கலாம்.  போக்சோ இ-பாக்ஸ்  மூலம் தகவல்களை  பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகள்  ஒரு குடும்ப உறுப்பினர், உறவினர் அல்லது நெருக்கமாக அறியப்பட்டவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க முடியவில்லை.

காலவரம்பு ஏதுமில்லை

வாழ்க்கையில் பல குழந்தைகளுக்கு   பாலியல் துஷ்பிரயோகம்  தொடர்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த அதிர்ச்சியை சமாளிக்க பல குழந்தைகள் வளர்ந்த  பிறகும்  குழந்தை காலத்தில்  நடத்தப்பட்ட துஷ்பிரயோகம் குறித்து புகார் தெரிவிக்கின்றனர் என கூறினார். அதிகார பூர்வமாக 2012-ம் ஆண்டின் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  கால வரம்பு ஏதுமின்றி  புகார் அளிக்கலாம் என சமீபத்தில் அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
பாலியல் குற்ற சட்டத்தின் (POCSO) குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் நவம்பர் 2012 ல் நடைமுறைக்கு வந்தது. இது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும்  பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து குழந்தைகள்  பாதுகாப்பிற்கான சட்ட விதிகள் பலப்படுத்தப்படுவதற்கான பாலியல்  சட்டமாகும். இந்த பாதுகாப்பு சட்டம் 18 வயதிற்குக் கீழான வரை ஒரு குழந்தையை வரையறுக்கிறது மற்றும் பாலியல் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாசம் ஆகியவற்றின் குற்றங்களில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து