முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

சபரிமலை : அனைத்து வயது பெண்களை கோயிலில் அனுமதிக்கும் விவகாரத்தில், பெண்களை சபரிமலை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் நேற்று தடியடி நடத்தினர். இதையடுத்து சபரிமலை போர்களமானது.

தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

தடியடியால் பதட்டம்

சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட திருவாங்கூர் தேவஸ்தான முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பந்தனம்திட்டாவில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராஜகுடும்பத்தின் கோரிக்கை

முன்னதாக, பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சசபரிமலை தந்திரி, பந்தள ராஜ குடும்பத்தினர், ஐயப்ப சேவா சமாஜம் உள்ளிட்டோர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. பக்தர்கள் எழுப்பும் கோரிக்கைகளை ஏற்க போர்டு தயாராக இல்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை என பந்தள ராஜா குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவசர சட்டம் தேவை

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு செய்ய அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசரச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு, காங்கிரஸ் எம்.பி. அந்தோணி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அதனை எதிர்த்து, அவசரச்சட்டத்தை இயற்றியது. பின்னர், நாடாளுமன்றத்தில் தனிச்சட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோல், தற்போதும் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரள காங்கிரஸ் கட்சியினர் கேரள மாநிலம் நிலக்கல்லில் போராட்டம் நடத்தினர். முன்னதாக, இதுதொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து