முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பிரதமர் பரிசீலித்து வருகிறார்.

கடும் எதிர்ப்பு

கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். இது உலகளாவிய எதிர்ப்புக்கு வழிவகுத்தது. ஆனாலும், அடுத்த கட்டமாக கடந்த மே மாதம், ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா முடிவு

இந்த நிலையில் அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் பரிசீலித்து வருகிறது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்தார். மேலும், ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு அளித்து வருகிற ஆதரவை மறுபரிசீலனை செய்யவும் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இதையும் பிரதமர் ஸ்காட் மோரீசன் கூறி உள்ளார்.

சாதகமாக அமையும்...

ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா ஒரு தரப்பினராக கையெழுத்திடாதபோதும், இப்போது தனது ஆதரவை வாபஸ் பெற்றால் அது அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதரவை இதில் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து