முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி :  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவரும்  உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வருமான என்.டி.திவாரி (92) உடல்நலக் குறைவால் வியாழனன்று காலமானார்.

2007 முதல் 2009 வரை ஆந்திர மாநில ஆளுநராகவும் பதவி வகித்த என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று காலமானார்.

இந்நிலையில் என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

என்.டி திவாரி மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். உயரிய தலைவரான என்.டி திவாரி, தனது நிர்வாகத்திறனால் அறியப்பட்டவர். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளால் என்.டி திவாரி நினைவு கூறப்படுவார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து