முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெச்1பி விசா விவகாரம்: ட்ரம்ப் நிர்வாகத்தோடு தொடர்புகொண்டதாக வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஹெச்1 பி விசாக்களின் கீழ் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த துறைகளில் வேலைநியமனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக வாஷிங்டன் தெரிவித்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் வேலைவாய்ப்புக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு பலன் கிட்டும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஹெச்பி1 விசாக்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர அமெரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா  ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸுடன் தொடர்புகொண்டு பேசியதாக வெளியுறவு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவிக்கையில்,

"இது எங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அதனால்தான், வெவ்வேறு நிலைகளிலும், அமெரிக்க பக்கத்திலுள்ள பிரச்சினைகளை நாம் மீண்டும் எடுத்துக் கொண்டோம். சமீபத்தில் நடந்த பேச்சுக்களின்போது இது பற்றி விவாதிக்கப்பட்டது,   இவ் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் மற்றும் அமெரிக்க காங்கிரஸுடன் இந்தியா நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது” என்றார்.

 ”விசா நடவடிக்கைகளில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததும் தற்போது இது தொடர்பாக சில சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் சரியான ஒன்றேயாகும்.

அந்த சட்ட மசோதாவில் நாம் என்ன விதிகளை கேட்டுப் பெறலாம் என்று யோசிக்கிறேன். ஆனால் இந்த மசோதாக்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதேநேரம், அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த திறமைவாய்ந்த இந்திய வல்லுநர்களால் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு விவாதத்தில் இந்தியா தெரிவித்தது” என்றார் ரவீஷ் குமார்.

ஹெச்1பி விசா, இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்பு வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பயன்படுத்துவதில் குடியேற்ற விசா அல்லாத விசாவை அமெரிக்க நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் பல பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இந்தியா மற்றும் சீனாவை சார்ந்துள்ளன.

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, புதிய திட்டங்களை வெளியிடப்போவதாக அறிவித்தது. அதில் அமெரிக்க குடியுரிமைகள் மற்றும் குடியேற்ற சேவைகளின் திட்டங்கள்  வரும் ஜனவரி 2019லிருந்து புதிய திட்டங்களுடன் தயாராகிவருவதாக தெரிவித்தது.

அத்திட்டத்தில் ஹெச் 1பி திட்டத்தின் வழியாக சிறந்த மற்றும் பிரகாசமான வெளிநாட்டு நபர்களைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு நிபுணத்துவ பணி நியமன வரையறைகளை மாற்றியமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பணியாளர்கள்

இதுமட்டுமின்றி அமெரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களது ஊதியங்களை சிறந்த முறையில் உருவாக்கவும் முதலாளி தொழிலாளிக்கு இடையே உள்ள வரையறைகள் மறுபரிசீலனையும் செய்யப்படவும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து