முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

கவுகாத்தி : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் விலகியுள்ளார்.

நாளை தொடக்கம்

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ம் தேதி கவுகாத்தியில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நிகோலஸ் பூரான்...

ஏற்கனவே கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத நிலையில் லீவிஸ் விலகல், வெஸ்ட் இண்டீசுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் போட்டி அணிக்கு கீரன் பவெலும், 20 ஓவர் போட்டி அணிக்கு நிகோலஸ் பூரானும் சேர்க்கப்பட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து