முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது - அமெரிக்க அதிபர் மாளிகை வருத்தம்

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டுள்ள செய்தி வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது என்று சவுதி அரேபிய அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். தூதரகத்தில் நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் 18 பேரையும் சவுதி அரேபிய அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தனது கட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

ஜமால் கஷோகி தொடர்பான விசாரணையை சவுதி அரேபியா நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது. இந்த கோர சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணையை தொடர்ந்து பின்பற்றுவோம். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வெளிப்படைத்தன்மையாக வாதாடுவோம். பத்திரிகையாளர் ஜமால் மறைவு உறுதியானது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து