முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்காடு அணிந்தால் பணியை தொடர முடியாது - மேலதிகாரி உத்தரவையடுத்து ராஜினாமா செய்த பாக். பெண் பலத்த எதிர்ப்பால் பதவி விலகிய சி.இ.ஓ.

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணிடம் தலையில் முக்காடு அணிந்ததால் வேலையை ராஜினாமா செய்யுமாறு மேலதிகாரி கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதனையடுத்து இளம்பெண் வேலையில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கராச்சியில் இயங்கி வரும் ஐ.டி. நிறுவனம் கிரியேட்டிவ் கேஹாஸ். இதில் புதிதாக முஸ்லிம் இளம்பெண் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தார். அவர் தினமும் தனது தலைக்கு முக்காடு இடுவது வழக்கம். இதைக் கண்ட அவரின் மேலதிகாரி, தலையில் முக்காடு அணிந்தால் பணியில் தொடர முடியாது. இது பணியிடத்தில் அனைவரையும் தர்ம சங்கடப்படுத்தும். இதனால் அலுவலகத்தின் பெயர் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வேலையில் இருந்து விலகினால், இரண்டு முஸ்லிம் வங்கிகளில் வேலை பெற்றுத் தருவதாகவும் மேலதிகாரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதைத் தொடர்ந்து நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜவாத் காதிர் மன்னிப்பு கோரினார். தவறான மற்றும் முறையில்லாத காரணங்களுக்காக மூத்த அதிகாரி, தன் சக ஊழியரை ராஜினாமா செய்யக் கூறி வலியுறுத்தி உள்ளார். இச்செயல் அவமானம் தருவது மட்டுமல்லாமல் நெறியற்ற செய்கையாகும். அப்பெண்ணை சங்கடத்துக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியதற்காக நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்று, அவர் மீண்டும் பணியைத் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

எனினும் மேலதிகாரியின் செயல் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்துக்கு ஆளானது. பெரும்பாலானோர் இது பணியிடத்தில் முஸ்லிம் பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாகுபாடு என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சி.இ.ஓ ஜவாத் காதிர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு, சி.இ.ஓ. மற்றும் மேலதிகாரி இருவரும் தற்போது பணியில் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து