முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிர்தசரஸ் ரயில் விபத்து: காயமடைந்தவர்களை சந்தித்த பஞ்சாப் முதல்வர் நீதி விசாரணைக்கு உத்தரவு

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : அமிர்தசரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து தொடர்பான நீதி விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்ற போது, தண்டவாளத்தில் நின்று நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதியதில் 60 பேர் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்தில் 300-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று பஞ்சாப் முழுவதும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பாதல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து தொடர்பான நீதி விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் காவல்துறை ஆணையருக்கு அமரீந்தர் ஆணையிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து