முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்குப் பதிவு

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

நிலக்கல் : சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பக்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இரண்டு பெண்கள்  மாலை அணிந்து இருமுடியுடன் வந்தனர். அவர்கள் சன்னிதானம் வந்து இறைவனை தரிசிக்க முயன்ற போது, அவர்கள் உள்ளே நுழைய எதிர்ப்பு தெரிவித்து நடைபந்தல் அருகே பக்தர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த இரண்டு பெண்களும் கோயிலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதே சமயம், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக 200 பக்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில பெண்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு வருகை தர உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் ஏராளமான போலீசார் கோவிலில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சபரிமலை சன்னிதான 18-ம் படியின் கீழ்  போராட்டம் நடத்திய தந்திரிகள், மேல்சாந்திகள், அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்தது. இதையடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரி சங்கரதாஸ் கூறுகையில்,

சபரிமலை கோவிலில் ஐயப்பனுக்கு அளிக்கப்படும் மரியாதையை போன்று தந்திரிகள், மேல்சாந்திகள் ஆகியோருக்கு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. இது போன்ற நிலை சபரிமலையில் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை. எனவே தந்திரிகள், மேல்சாந்திகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கிடையே பத்தனம் திட்டா கலெக்டர் சபரிமலை பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை வரும் 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 22-ம் தேதி சபரிமலை நடை அடைக்கப்படும். எனவே அன்று வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் நேற்று சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து