முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நடந்த தசரா விழாவில் ஜனாதிபதி , பிரதமர் பங்கேற்பு

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி செங்கோட்டையில் உள்ள ஆகஸ்ட்-15 பூங்காவில்,  நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்றனர். தீ பந்தம் கொண்ட அம்பை எய்து ராவணன், கும்பகர்ணன், மேகநாத் ஆகியோரின் உருவ பொம்மைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு  குச ராம் லீலா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. முன்னதாக நடைபெற்ற ராமாயண நாடகத்தில், ராமன், சீதை, லட்சுமணன் வேடமிட்டவர்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி,தவறான செயல்களை விட நேர்மையான செயல்களே வெற்றியைத் தரும் என்பதை நினைவுபடுத்துவதே விஜயதசமி. இந்நிகழ்ச்சி நேர்மையான வாழ்க்கையை வாழ தன்னம்பிக்கை அளிக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியானது, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு, அருகில் உள்ள பகுதியில் காங்கிரஸ் சார்பிலும் தசரா விழா கொண்டாடப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து