முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு எடுத்து வருகிறது என்றும், அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்டம், ஒமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து எடப்பாடிக்கு செல்லும் வழியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:- 

கேள்வி:  சபரிமலைக்கு பெண்கள் செல்வது பற்றி ...

பதில்:  அது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. அதில் விமர்சனத்திற்கோ, கருத்து சொல்வதற்கோ எதுவுமில்லை.

கேள்வி:  மத்திய உள்துறை அமைச்சகம் கேரளா பிரச்சினையையடுத்து, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் பாதுகாப்பு கருதி ஒரு அறிக்கை அனுப்பியருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?

பதில்:  தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத அளவிற்கு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

கேள்வி:  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்களே?

பதில்:  ஏற்கனவே ஜாக்டோஜியோ அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்குழு அறிவிக்கப்பட்டு  ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது.  அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளெல்லாம் அரசால் அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  ஆகவே, இன்றைக்கு அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.  அரசைப் பொறுத்தவரைக்கும், நிதிநிலைக்கு ஏற்றவாறு, அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

கேள்வி: ஏற்கனவே இருந்த பென்சன் ஸ்கீம் வேண்டுமென்று சொல்கிறார்களே?

பதில்: அது இரண்டு மாநிலங்கள் தவிர வேறு  எந்த மாநிலத்திலும் கிடையாது.

கேள்வி: தேர்தல் வாக்குறுதியில் அம்மா இந்த மாதிரி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்:  நிதி ஆதாரம் இல்லையே, நிதி ஆதாரம் இருந்தால்தானே எல்லாம் கொடுக்க முடியும். தமிழகத்தின் 7-வது ஊதியக்குழு வகையில் 14,719 கோடி அதற்கு மட்டும் அரசு கூடுதலாக செலவழிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது,  அகவிலைப்படியும் உயர்த்தியிருக்கிறார்கள், அதில் கிட்டத்தட்ட 1200 கோடி வழங்கப்படுகிறது.  இப்படி அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அரசால் தக்க உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கேள்வி:  இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா?

பதில்:  அரசாங்கத்தின் நிதிச்சுமை குறித்து அரசு ஊழியர்களுக்கு முழுக்க முழுக்க தெரியும். ஏனென்றால், அவர்கள்தான் இந்த அரசாங்கத்தையே நடத்தக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றவர்கள்.  அரசாங்கத்தின் நிதிநிலைமை அவர்களுக்கு நன்றாக புரியும், அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?

பதில்:  ஏற்கனவே பலமுறை அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சகம் மற்றும் துறைச் செயலாளர் அழைத்து பேசுவார்கள்.

கேள்வி: தமிழக முதல்வர் மட்டும் எங்களை அழைத்துப் பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்களே?

பதில்:  கடந்த காலத்தில் சுமார் இரண்டு வருடம் வரை அதை நீட்டித்துத்தான் வழங்கினார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதைப் புரிந்து, அம்மாவினுடைய அரசு அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்கி வருகிறது. அவர்கள் இந்தக் கோரிக்கை வைப்பதற்கு முன்பே அவற்றை உடனே வழங்கியிருக்கிறோம்.

கேள்வி:  எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்களே?

பதில்:  நாட்டில் எல்லோருக்கும் கேட்க உரிமையுண்டு. இது ஜனநாயக நாடு, அந்த அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.

கேள்வி: டெங்கு காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வருகிறதே...

பதில்: இப்பொழுது தமிழகம் முழுவதும் பருவமழை பெய்த காரணத்தினாலே தேங்கியிருக்கின்ற தண்ணீரை அந்தப் பகுதியில் இருக்கின்ற மாநகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் அந்த நகரப் பகுதிகளிலெல்லாம் தண்ணீர் தேங்காமல் தண்ணீரை அகற்றி, டெங்கு கொசு உற்பத்தியாகாத அளவிற்கு மருந்து தெளித்தும் முன்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அரசாங்கமே முழுவதும் செய்துவிட முடியாது, பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. பழைய டயர், உடைந்து போன பக்கெட்டுகளில் தண்ணீர் தேங்குகிறது.  அந்தத் தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது.  நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. பொதுமக்கள் விழிப்போடு இருந்து, மழை பெய்கின்ற காலங்களிலே தங்கள் வீட்டை சுற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை அந்த வீட்டின் உரிமையாளர் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும். அரசைப் பொறுத்தவரைக்கும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து