முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

நிலக்கல்,சபரிமலைக்கு சென்ற ஆந்திர பெண் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து போராட்டக்காரர்கள் வன்முறை, கலவரங்களில் ஈடுபட்டு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை திருப்பி அனுப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 3 பெண்கள் சபரிமலைக்கு சென்று போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர். அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலம்மா (45) நேற்று சபரிமலைக்கு சென்றார். அப்போது நடைப்பந்தல் என்ற இடத்தில் பாலம்மாவை திரும்பி போகுமாறு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டனர். எனினும் அவர் செல்ல மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் பாலம்மா மீது தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த பாலம்மா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து