முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் – டீசல் விலை இறங்கு முகம்

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதியில் உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 63 காசு குறைந்து ஒரு லிட்டர் 84 ரூபாய் 70 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 78 காசு குறைந்து, 77 ரூபாய் 11 காசுக்கு விற்பனையானது. தொடர்ந்து பெட்ரோல்–டீசல் விலை குறையும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கியது.

கடந்த 2 வாரங்களுக்கு பிறகு கடந்த 18-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசு குறைந்து, ஒரு லிட்டர் 85 ரூபாய் 88 காசுக்கு விற்பனை ஆனது. 19-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 66 காசு குறைந்து, 85 ரூபாய் 22 காசுக்கு விற்பனை ஆனது.நேற்று முன்தினம் இதே போல், டீசல் விலையும் லிட்டருக்கு 24 காசு குறைந்து, ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 69 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து 84 ரூபாய் 96 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 79 ரூபாய் 51 காசுகளுக்கும் விற்பனையானது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகத்தில் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து