முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ரா போலவே பந்து வீசும் பாகிஸ்தானின் 5 வயது சிறுவன்

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

இஸ்லாமாபாத்,மேற்கு இந்திய தீவுகளின் ஜொயெல் கார்னர் பந்து வீசும் முறையை ஓரளவுக்குத் தன்னகத்தே கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தன் சிறுவயதில் பெரிய பவுலர்களை அப்படியே காப்பி அடித்து வீசும் பழக்கம் உடையவர் என்று அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பும்ராவின் ஆக்ஷனைப் போலவே தானும் வீச முயற்சி செய்வதாக டுவிட்டர் பதிவொன்றில் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இந்த டுவிட்டரில் அந்தச் சிறுவன் பும்ராவின் மிகப்பெரிய விசிறி என்றும் ஆசியக் கோப்பையில் அவர் வீசுவதைப் பார்த்து உத்வேகம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பும்ராவே இந்த வீடியோவைப் பார்த்து விட்டு தன் டுவிட்டரில், நான் சிறுவனாக இருக்கும் போது பலரது ஆக்ஷனைக் காப்பி அடித்து வீச முயற்சி செய்வேன். இப்போது சிறுவர்கள் என் பந்து வீச்சை காப்பி செய்கின்றனர் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து