முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டன்சத்திரத்தில் உலகின் முதல் தற்கொலை போராளி வீரமங்கை குயிலி வீரவரலாற்று நூல் அறிமுக விழா

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை யூசுப்ராவுத்தர் திருமண மஹாலில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இராணி வேலுநாச்சியாரின் பெண்கள் படைத்தளபதி உலகின் முதல் தற்கொலை போராளி வீரமங்கை குயிலி அவர்களின் வீரவரலாற்று நூல் அறிமுகம் மற்றும் நூலாசிரியர் சந்திமாவோ அவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.
 இவ்விழாவிற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் க.சின்னக்கருப்பன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் நாட்டாமை இரா.திருமூர்த்தி, கே.திருமலைசாமி மற்றும் 15-வது வார்டு ஆட்டோ தி.வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் பிரபல வழக்கறிஞர் ஈசக்காம்பட்டி பி.பெருமாள் வரவேற்று பேசினார்.
 விழாவில் வீரமங்கை குயிலி அவர்களின் வீரவரலாற்று நூலினை பேராசிரியர் முனைவர் பி.விஜயகுமார் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். விழாவில் நூல் ஆசிரியர் சந்திமாவோ ஏற்புரையாற்றினார். இதில் ஆதித்தமிழர் மக்கள் இயக்க அமைப்பாளர் சுரா.தங்கபாண்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் மாவட்ட செயலாளர் கவிஞர் சசி, வழக்கறிஞர்கள் வெ.பெருமாள், க.மாரிமுத்து. ஆர்.முருகானந்தம், பி.காளிமுத்து (எ) காவியச்செல்வன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் ப.விடுதலை, ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.வினோத், தலித் கூட்டமைப்பு வே.கணேசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ம.போஸ், மேற்கு மாவட்ட செயலாளர் கரு.இரணியன், ஆதித்தமிழர் மக்கள் இயக்க இளைஞர்அணி செயலாளர் ப.பொன்னையன், ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் சி.சுந்தரம், தமிழ்ப்புலிகள் மண்டல செயலாளர் க.மணிவேல், இணையும் கரங்கள் சமூக நலச்சங்கத்தின் பூபதி, வழக்கறிஞர் கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் வி.பாஸ்கரன் மற்றும் ஊடகத்துறையின் பி.ஆறுமுகம், ஆ.இளங்கோவன், டேனியல் (எ) மாயவன், என்.ஆறுமுகம், பவுன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் சமூக ஆர்வலர் ஏ.முருகானந்தம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து