முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடிநாயக்கனூர் பகுதிகளில் மழையால் சேதமடைந்த வீடுகளை துணை முதல்வர் .ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

     தேனி,-  தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  , மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்,  முன்னிலையில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகள் மற்றும் வாய்க்கால்களை  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் இராசிங்காபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட மணியம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த வீடுகளையும், சிலமலை வருவாய் கிராமத்திற்குட்பட்ட மல்லிங்காபுரம் கிராமத்தில் சேதமடைந்த வீடுகளையும்;, தேவாரம் பேரூராட்சி பிரம்பு வெட்டி ஒடையிலிருந்து வார்டு எண் 16 மற்றும் 18 ஆகிய குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்துள்ள பகுதியினையும், பொட்டிபுரம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட முத்தையன் செட்டிபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் பள்ளியில் சேதமடைந்துள்ள சுற்றுசுவரினையும்   தமிழ்நாடு துணை முதலமைச்சர்  .ஓ.பன்னீர்செல்வம்  , பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
 ஆய்விற்குப்பின்  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  தெரிவிக்கையில்,
 தென்மேற்கு பருவமழை  பரவலாக மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் 1 வீடும்,  பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட டி.கல்லுப்பட்டி, சருத்துப்பட்டி, அழகர்சாமிபுரம், தென்கரை, இ.புதுக்கோட்டை ஆகிய கிராமங்களில் 6 வீடுகளும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போ.அம்மாபட்டி, இராசிங்காபுரம், சிலமலை, உப்புக்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம் ஆகிய இடங்களில் 16 வீடுகளும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட மார்க்கையன்கோட்டை கிராமத்தில் 3 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.
 மாவட்டத்தில் மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்கிட உத்தரவிடப்பட்டு, வீடு முழுவதும் சேதமடைந்தவர்களுக்கு ரூ.5,000ஃ-மும், பாதி வீடு சேத மடைந்தவர்களுக்கு ரூ.4,100 -ம் வீட்டின் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இணையதளத்தின் வாயிலாக விரைந்து செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையினால் வீடுகள் சேதமடைந்த தகுதி வாயந்த நபர்களுக்கு முதலமைச்சரின் மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எதிர் வருகின்ற வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என   தமிழ்நாடு துணை முதலமைச்சர்  .ஓ.பன்னீர்செல்வம்   தெரிவித்தார்.
 இந்;த ஆய்வின்போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன,; கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, உத்தமபாளையம் சார் ஆட்சியர் ஆர்.வைத்தியநாதன்,  உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சு.சேதுராமன், முன்னாள் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.எம்.சையதுகான், மாவட்ட கோ-கோ விளையாட்டு கழகத்தலைவர் திரு.ஒ.ப.இராவீந்தரநாத்குமார், வட்டாட்சியர்கள் உதயராணி, ஆர்த்தி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலவலர்கள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து