முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு வண்ண நிறங்களில் மர இலைகள் சிகாகோவில் கண்டுகளிக்க ஒரு பூங்கா

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

சிகாகோ,அழகான இலையுதிர் காலம் தற்போது அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருந்து வருகிறது. இந்த இலை உதிர் காலத்தின் சிறப்பே பச்சை இலைகள் எல்லாம் இந்த காலத்தில் மஞ்சள், பழுப்பு, சிகப்பு, பிரவுன் என்று வண்ண வண்ணமாக மாறுவது தான் . குச்சி குச்சியாக நீளமான இலை கொண்ட மரங்களை தவிர எல்லா மரங்களும் நிறம் மாறி சாலையோரங்களில் இருபுறமும் பார்ப்பதற்கே அழகு தான்.

எல்லா இடங்களிலும் வண்ண இலைகள் கொண்ட மரங்கள் பார்க்க முடிந்தாலும் இந்த இல்லை உதிர் காலத்தை ரசிக்க என்று சிறப்பு இடங்கள் உள்ளது. அந்த மாதிரி இடங்களில் இரு புறமும் வண்ணம் மாறும் இலைகளை ரசித்து கொண்டே செல்லலாம்.
அப்படியான ஒரு அழகான இடம் தான் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற இடத்தில் உள்ள லேக் ஜெனீவா. விஸ்கான்சின் லேக் ஜெனீவாவில் உள்ள ஒரு அழகான ஏரியை சுற்றி நடந்து கொண்டே மிதந்து போகும் படகையும் வரிசையாக சுற்றி இருக்கும் அழகு ஆடம்பர பங்களா அப்புறம் எல்லா பக்கமும் இருக்கும் அழகான மரங்களையும் வண்ண வண்ண இலைகளையும் ரசித்து கொண்டே ஒரு குட்டி நடை போட அங்கு சென்று வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து