முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு 362 கி.மீ. பயணம் செய்து பீட்சாவை டோர் டெலிவரி செய்தவருக்கு பாராட்டு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

மிச்சிகன்,ஜூலீ மார்கன் - ரிச் மார்கன் என்ற அமெரிக்க தம்பதி மிச்சிகன் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கு வேறு ஒரு தொலை தூர நகரத்தில் வேலை கிடைத்ததும், 20 வருடத்திற்கு முன் மிச்சிகனிலிருந்து கிளம்பி சென்று விட்டனர். என்றாலும் மிச்சிகன் போன்ற ஒரு சிறந்த இடத்தை இவர்களால் வாழ்க்கையில் மறக்கவே முடியவில்லை. அதுவும் அங்கிருக்கும் பீட்சா கடை என்றால் இருவருக்குமே கொள்ளை பிரியம். இந்நிலையில், ஜூலிக்கு பிறந்த நாள் வரப்போகிறது. அதனால் தம்பதி இருவரும் பிறந்த நாளன்று மிச்சிகனில் உள்ள பீட்சா கடைக்கு போகலாம் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.

ரிச் மார்கனை திடீரென புற்றுநோய் பாதித்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக பாதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ரிச் மார்கனை அவரது உறவினர் ஒருவர் சந்திக்க சென்றார். அப்போது பீட்சா சாப்பிட இருவரும் ஆசைப்பட்டதும், இதற்காக மிச்சிகன் செல்ல திட்டமிட்டிருந்ததும் அவருக்கு தெரியவந்தது.இதை கேள்விப்பட்ட அந்த உறவினர், மிச்சிகனில் உள்ள பீட்சா கடையை தேடிப்பிடித்து அங்கு போன் செய்தார். அந்த கடைக்காரரிடம் நடந்த விவரங்களை எல்லாம் சொன்னார். ஆனால் எத்தனையோ பீட்சா கடை அந்த பகுதியில் இருந்தாலும் இந்த கடையில் மட்டும் டோர் டெலிவிரியே கிடையாதாம். ஆனாலும் இதனை கேள்விப்பட்ட அந்த பீட்சா கடையில் வேலை பார்க்கும் 18 வயது இளைஞர் ஒருவர், ரிச் மார்கன்-ஜூலி தம்பதிக்கு பீட்சா டெலிவரி செய்ய மனமுவந்து ஒப்புக் கொண்டார். அதற்காக 362 கி.மீ. தூரம் பயணம் செய்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரிச் மார்கனுக்கும், ஜூலிக்கும் பீட்சாவை கொண்டு வந்து டெலிவரி செய்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை கேள்விப்பட்ட பலரும் இளைஞருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து