முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கட் பிரபு கூட்டணியுடன் புதிய படத்தை தொடங்கிய சிம்புதேவன்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

சிம்புதேவன் இயக்கவிருந்த இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகி பின்னர் விலகுவதாக வடிவேலு அறிவித்துள்ள நிலையில், இயக்குநர் சிம்புதேவன் புதிய படமொன்றை தொடங்கினார்.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் ச‌ங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது .ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்குகிறார்.6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக இருக்கிறது. சமீபத்தில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து