முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியில் சர்கார், திமிரு புடிச்சவன் மோதும் 6 படங்கள்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

விஜய்யின் சர்கார், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட 6 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியிருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமீர் கான் - அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.

3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. ஆறு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. எனவே திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து