முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஜல் அகர்வாலின் 'பாரிஸ் பாரிஸ்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் 'குயின்' ரீமேக்கான தமிழ்ப் படத்துக்கு 'பாரிஸ் பாரிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் 'குயின்'. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்குச் செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தைத் தொடங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுய அடையாளத்தை எப்படிக் கண்டுகொள்கிறாள் என்பதே 'குயின்' கதைக்கருவாகும்.பெண்களுக்கான சுதந்திரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் பதிவு செய்த படம் 'குயின்'.

முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கதை, திரைக்கதையை எந்த மொழியில் இயக்கினாலும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதால் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ரீமேக் ஆகிறது.

இந்தப் படத்தை இரு மொழிகளிலும் ரமேஷ் அரவிந்த் ரீமேக் செய்கிறார். தமிழில் காஜல் அகர்வாலும், கன்னடத்தில் பருல் யாதவும் நடிக்கின்றனர். இந்நிலையில் 'குயின்' தமிழ் ரீமேக் படத்துக்கு 'பாரிஸ் பாரிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து