முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறைவடைந்தது தாமிரபரணி மகா புஷ்கர விழா 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

நெல்லை,தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 12 நாட்களில் 60 லட்சம் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர்.குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கர விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது. 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந்தது.

விழாவின் உச்சக்கட்டமாக தாமிரபரணியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். புஷ்கர விழா நேற்று மாலை மகா ஆரத்தியுடன் நிறைவடைந்தது. இதனால் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். கடந்த 11-ம் தேதி தொடங்கிய இந்த மகா புஷ்கர விழாவில் நேற்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து