முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாட்களுக்கு பிறகு ஐயப்பன் கோவில் நடை அடைப்பு இதுவரை 12 பெண்கள் தடுத்து நிறுத்தம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,5 நாட்களுக்குப் பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது. இதுவரை சபரிமலைக்கு சென்ற 12 பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேவசம்போர்டு நிர்வாகத்தினர், பந்தள அரச குடும்பத்தினர், தந்திரிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் நீலக்கல்லில் போராட்டம் நடத்தினர். முன்னதாக ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து முதல் நாளன்றே கேரளாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுகாசினி, லிசி, ஆந்திராவை சேர்ந்த மாதவி ஆகியோர் சன்னிதானம் செல்ல முயன்றனர். அவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மறுநாள் ஆந்திர பெண் பத்திரிகையாளர் கவிதா, சமூக ஆர்வலர் பாத்திமா ஆகியோர் சபரிமலை செல்ல முயன்ற போது பக்தர்களின் போராட்டத்தால் படி ஏற முடியாமல் ஊர் திரும்பினர். பக்தர்களின் போராட்டத்தால் கடந்த 20-ம் தேதி சபரிமலையில் பதட்டமான சூழல் நிலவியது. நேற்று முன்தினம் ஆந்திராவை சேர்ந்த வாசந்தி, ஆதித்ய சேஷி ஆகியோர் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 6 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுவரை 12 பெண்கள் சபரிமலை சன்னிதானம் செல்ல முயன்று பக்தர்களால் தடுத்து நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. நவம்பர் மாதம் 16-ம் தேதி மாலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்படவுள்ளது.  இதையடுத்து வனத்துறை பகுதியில் தங்கியுள்ள போராட்டக்காரர்களை வனத்துறை உதவியுடன் அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து