முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ஐயப்பனிடம் மனமுருகி வேண்டிய கேரள ஐ.ஜி.

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை,டி-ஷர்ட், வேட்டி அணிந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீருடன் ஐயப்பன் முன்பு நின்று மனமுருகி வேண்டி ஐஜி ஸ்ரீஜித் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சபரிமலை கோவில் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த பிறகு அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கடந்த 17-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்ட பின்பு இது மேலும் தீவிரமடைந்தது. ரெஹனா, கவிதா ஆகிய 2 பெண்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டபோது கலவரம் மேலும் சூடானது. பக்தர்களுடன் எங்களுக்கு மோதல் தேவையில்லை, தாங்கள் சட்டத்தினை பின்பற்றுகிறோம் என்று சொன்னார் கேரள ஐ.ஜி. ஸ்ரீஜித்.

அப்போது அந்த பெண்களுக்கு காவலர்கள் பயன்படுத்தும் கவசங்களை அணிவித்து போலீஸ் பாதுகாப்புடன் தனது தலைமையில் பத்திரமாக அழைத்து வந்தவர்தான் இந்த ஐ.ஜி. ஸ்ரீஜித். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கூட்டம் முண்டியடித்து கொண்டு சென்றது. அந்த கூட்டத்தில் ஒருவராக நின்று டி -ஷர்ட் மற்றும் வேட்டி அணிந்து ஐ.ஜி. ஸ்ரீஜித்தும் நின்று கொண்டிருந்தார். கருவறை கதவு திறக்கப்பட்டதும் அப்போது கையெடுத்து ஐயப்பனை வணங்கிய ஸ்ரீஜித் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. அவர் மனமுருகி வேண்டிய அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து