முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரி இன்று கூறியதாவது:- இலங்கையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியிலும், தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரம், வானூர் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம், அனைக்காரன் புதூர் 8 செ.மீட்டரும், பேச்சிப்பாறை, சத்தியமங்கலம், பாபநாசம், மரணக்காணம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து