முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன்னில் குருபூஜை விழா : வாகன ஓட்டுநர்கள் அச்சக உரிமையாளர்களுடன் முதுகுளத்தூர் டி.எஸ்.பி ஆலோசனை

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  கடலாடி-    பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் டிஎஸ்பி உதயசூரியன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
      இராமநாதபுரம் மாவட்டம் கமுதி  அருகே உள்ள பசும்பொன்  கிராமத்தில்  சுதந்திரபோராட்ட தியாகியும் ஆன்மீகவாதியுமான  முத்துராமலிங்கத்தேவரின் நினைவாலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-29-30 ஆகிய மூன்று நாட்கள் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 111வது ஜெயந்தி மற்றும் 56வது குருபூஜை விழா நடைபெற உள்ளது.           இந்நிகழ்ச்சியில் அரசியல்கட்சி தலைவர்கள்- அரசு  அதிகாரிகள் என அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர்.
    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ; அச்சக உரிமையாளர்கள்- வாகன ஓட்டுநர்கள் -ஒலிபெருக்கி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் போது டிஎஸ்பி உதயசூரியன் கூறியதாவது:
  முதுகுளத்தூர் மற்றும் கடலாடி  பகுதிகளில் அனுமதி பெறாமல் வாகனங்கள் செல்லக்கூடாது. ஒலிபெருக்கிகளில் தலைவர்களின் பாடல்களை ஒளிபரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.  அச்சகங்களில் அடிக்க கூடிய நோட்டீஸ்களில் தவாறான வாசகங்களை அச்சிடக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை எடுத்துக்கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து