கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் கைகழுவும் முறை பற்றிய விழிப்புணர்வு

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      தேனி
22 hands news

தேனி -தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படியும், தேனி சுகாதார பணிகள் துணை இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும்,  கெங்குவார்பட்டி முதல் நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கெங்குவார்பட்டி பேரூராட்சியும்,  அரசு ஆரம்ப சுகாதார நிலையமும்  இணைந்து கைகழுவும் முறை பற்றி மக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.டி.கணேசன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கை கழுவும் முறையின் செயல் விளக்கத்தினை சுகாதார ஆய்வாளர்கள் பாண்டி, பிரதாப்சிங் ஆகியோர் வழங்கினர். மேலும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுப்புறச்சுகாதாரம் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பவானந்தம் எளிமையாக மக்கள் புரியும்படி எடுத்துரைத்தார். ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் வினோத், செவிலியர் கற்பகஜோதி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து