முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீ டூ விவகாரம் அதிர்ச்சியாக உள்ளது: ஏ.ஆர்.ரஹ்மான்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,மீ டூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் மீடூ குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் அரசியல் மற்றும் ஆன்மீக பரபரப்புகளுக்கு மத்தியில் திரும்பும் திசையெல்லாம் தெறிக்கவிட்டு வரும் மீ டூ-வின் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ஒருவர் தனது பதவியையே இழந்துள்ளார். பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப கவிஞர் லீணா மணிமேகலை, இயக்குநர் சுசிகணேசன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து சின்னத்திரையில் மீடு விவகாரம் எழுந்தது. பின்னர் அரசியல், ஊடகத்துறை, பாலிவுட், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தரப்பில் இருந்தும் மீ டூ விவகாரம் தினந்தோறும் பெரும் புயலாய் புறப்பட்டு பெண்கள் மத்தியில் புரட்சி வெடித்து வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீ டூ குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்: அதில், மீ டூ இயக்கத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் பெயரும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது திரையுலகை நேர்மையும், சுத்தமானதாகவும், பெண்களுக்கு மரியாதையளிக்கக் கூடிய ஒன்றாகவும் பார்க்கவே விரும்புகிறேன். சாதிக்க வருவோருக்கு எந்த இடையூறும் ஏற்படாத சூழலை உருவாக்க தாமும், தமது குழுவினரும் உறுதியேற்றுள்ளோம். எங்களுடன் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பான, நன்முறையில் வேலை பார்ப்பதற்கான சூழலையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். சமூக வலைதளங்கள் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கான மிகப்பெரிய சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அதைத் தவிர்க்க நாம் இணையதள நீதி அமைப்பு ஒன்றைக் கவனமாக உருவாக்குதல் நல்லது" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து