முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி. தேர்தலில் தோனியை களமிறக்க பா.ஜ.க. திட்டம்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஆளும் பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

இதைச் சமாளிக்க கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி, டெல்லியைச் சேர்ந்த கவுதம் கம்பீர் ஆகிய 2 பேரையும் நட்சத்திர பிரச்சாரகர்களாக நியமிக்க பா.ஜ.க தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், இந்த 2 பேரையும் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் பா.ஜ.க  சார்பில் வேட்பாளர்களாக களமிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
ஆனால், தேர்தலில் போட்டியிட தோனி தயங்குவதால், பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படு கிறது. ஐ.பி.எல் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இருப்பதால் தமிழகத்தில் அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே, தோனியை ஈடுபடுத்துவதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பா.ஜ.கவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என கட்சி மேலிடம் கருதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து