முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள பாடகி விஜயலட்சுமிக்கு திருமணம் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் வைக்கத்தைச் சேர்ந்தவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வைக் குறைபாடு உள்ளவரான இவர் பிரபலபாடகியாக உள்ளார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் சொப்பனசுந்தரி நான்தானே, வாயாடி பெத்த புள்ள உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளார்.
இவருக்கும் மிமிக்ரி கலைஞரும், வீட்டு உள் அலங்கார நிபுணருமான அனூப்புக்கும் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்றது. இந்நிலையில் வைக்கத் திலுள்ள மகாதேவா கோயிலில் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது.மலையாள திரைப்பட இசை யமைப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங் களும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து