முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபந்தனைகளுடன் பட்டாசு விற்க அனுமதி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் சுப்ரீம் கோர்ட் தடாலடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி தினத்தில் இரவு 8 முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசுக்கு முக்கிய பங்குண்டு. கடந்த சில ஆண்டுகளாக காற்றில் மாசு அதிகரிப்பதாக கூறி பட்டாசு வெடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கடந்த 2016-ல் டெல்லியில் மிகப் பெரிய அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டதையடுத்து தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீ்ம் கோர்ட் தடை விதித்தது. கடந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தற்காலிக  தடை விதித்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த அர்ஜூன் கோபால் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன. இதை எதிர்த்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில்,

நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க இயலாது. டெல்லியில் இதுவரை பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடை இன்று(நேற்று) முதல் நீக்கப்படுகிறது. என்றாலும் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர இந்த கோர்ட் விரும்புகிறது. பட்டாசு விற்பனையை ஒழுங்குபடுத்தி விற்பனை செய்ய வேண்டும். தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம். குறைந்த சக்தி கொண்ட ஒலி எழுப்பும் பட்டாசுகளையே மக்கள் வெடிக்க வேண்டும்.

உரிய லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசுகளை கடைகளில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் யாராவது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தயாரிப்பதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். அது போல அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளும் விற்பனை செய்ய கூடாது. பட்டாசுகள் டீலர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். ஆன்லைனில் பட்டாசு விற்பனையை ஏற்க இயலாது. எனவே ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து