முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமை தொடங்கும் - வானிலை மையம்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வருகிற 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் தொடங்கி 4 மாதமாக நீடித்து வந்த தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முடிவடைந்தது. இதையடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி காணப்பட்டது. ஆனால் வங்கக்கடலில் புயல் உருவாகி ஒடிசாவை தாக்கியதால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் எதிர்பார்த்தப்படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இப்போது வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதேபோல் இலங்கை அருகே வட தமிழகத்தில் கிழக்கு மேற்காக காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.இதன் காரணமாக இந்தியாவின் தென் தீபகற்ப பகுதியான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் வருகிற 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தொடங்கியுள்ளது. அதன்பிறகு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 6 செ.மீ, நாங்குனேரியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், சீர்காழி, செங்கோட்டை, போடியில் 4 செ.மீ, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், வேதாரண்யம், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து