முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 111 பேருக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் நிதியுதவியை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,106 நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி, குடும்ப நல நிதியுதவி, மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவி என 111 பேருக்கு 1 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதியுதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர்.

முன்னோடித் திட்டங்கள்....‘‘உழைப்பவரே உயர்ந்தவர்’’ என்று தனது வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர். வலியுறுத்திக் கூறி வந்தார். உழைக்கும் மக்களின் உயர்வுக்காக ‘‘ அ.தி.மு.க.’’ என்னும் உன்னத இயக்கத்தை தமிழகத்திற்குத் தந்தவர், உழைப்பால் உயர்ந்த உத்தமர் எம்.ஜி.ஆர். அவர் வகுத்துத் தந்த அரசியல் பாதையில் பயணம் செய்த ஜெயலலிதா உழைக்கும் மக்களின் உயர்வுக்காக தனது ஆட்சிக் காலங்களிலும், அ. தி.மு.க.விலும் மேற்கொண்ட முன்னோடித் திட்டங்கள் அநேகம். தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த அம்மா, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து, அவர்கள் தங்களது வாழ்வில், அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதில் தனி அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தார்.

ஒவ்வொரு ஆண்டும்...உழைப்போர் திருநாளாம் ‘‘மே" தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அ. தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.

குடும்ப நல நிதியுதவி... அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று காலை சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த, 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம், 1 கோடியே 6 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கினார்கள்.

மருத்துவ சிகிச்சைக்கு...அதனைத் தொடர்ந்து, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த 3 அ.தி.மு.க. தொண்டர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப நல நிதியுதவியாக தலா 2 லட்சம் ரூபாய் வீதம் 6 லட்சம் ரூபாயையும்; சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாயையும் வழங்கி ஆறுதல் கூறினார்கள்.

நெஞ்சார்ந்த நன்றி...ஆகமொத்தம், நேற்று மட்டும் 111 பேர்களுக்கு, 1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள், அ. தி.மு.க.வின் சார்பில் நிதியுதவியாக வழங்கப்பட்டது. தங்களது குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலையை அறிந்து நிதியுதவி வழங்கிய, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு, நிதியுதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை உள்ளம் நெகிழ தெரிவித்துக் கொண்டனர்.

உற்சாக வரவேற்பு...முன்னதாக, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த, நலிந்த தொழிலாளர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரை வரவேற்கும் விதமாக, சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து