முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

   பரமக்குடி - இராமநாதபுரத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் டாக்டர் மணிகண்டன்  தொடங்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்,முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசிய பாண்டியன் கலந்துகொண்டனர்.இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பரமக்குடி சரக உதவி கைத்தறி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 86 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் 12170 நெசவாளர்கள் பயன்பெற்று வருகின்றார்கள்.இச்சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேலை இரகங்கள் மிகவும் பிரசத்தி பெற்றதாகும்.நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள ஜவுளி தேக்கத்தினை குறைத்திடும் பொருட்டு நுகர்வோர்களிடம் கைத்தறி துணிகளின் மகத்துவத்தை உணரச் செய்து விற்பனையை பெருக்கும் பொருட்டு ஆண்டுதோறும் மத்திய/மாநில அரசுகளின் நிதி உதவியுடன் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு இராமநாதபுரம் நகரில் 14.10.2016 முதல் 27.10.2016 முடிய நடைபெற்றது. கண்காட்சியில் ரூ 68.00 இலட்சம் மதிபுள்ள ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையினையொட்டி இராமநாதபுரம் காதர் டீலக்ஸ் திருமண மகாலில் (ரமேஸ் திரையரங்கு அருகில்) 22.10.2018 ல் துவங்கி 04.11.2018 வரை நடைபெற்று வருகிறது.இச்சிறப்பு கைத்தறி கண்காட்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைத்தறி துணிகள் விற்பனைக்கு வந்துள்ளன.அனைத்து இரகங்களுக்கும் 30 % அரசு தள்ளுபடியாக வழங்கி அனுமதிக்கபட்டுள்ளது.இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கைத்தறி துணிகளை அனைவரும் வாங்கி கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவிப்பை பரமக்குடி கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் தெரிவிக்கின்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து